தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டையை பயன்படுத்துவது எப்படி?


பட்டுப் போன்ற அடர்த்தியான முடியைப் பேணுவதில் யாருக்குத் தான் ஆசை இல்லை. ஆனால் சூழல் மாசுக்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் முடி உதிர்வும், பாதிப்பும் ஏற்படுவது பொதுவானதே.

முடி பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் போதியளவு புரோட்டின் கிடைக்காமையே. முட்டையில் முடிக்குத் தேவையான எல்லா விதமான புரோட்டின் காணப்படுவதனால் முடியை முடியின் வேர்களை வலிமையடையச் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கின்றது.

அத்துடன் முடியின் இயற்கையான எண்ணெய்த் தனமையையும் கட்டமைப்பையும் பேணுவதில் முட்டையில் உள்ள புரோட்டின் உதவுகின்றது.

முடியின் பாதிப்பிற்கு அழகு நிலையங்களிற்குச் சென்று பணவிரயம் செய்வதை விட வீட்டிலேயே இருந்து இயற்கையான முறையில் முடி பராமரிப்பை மேற்கொள்வது சாலச் சிறந்தது.
முடியின் ஆரோக்கியத்திற்கு முட்டையை பயன்படுத்துவது எப்படி?

1. முட்டையும் ஒலிவ் எண்ணெய்யும்.
2 முட்டை மஞ்சள் கருவுடன் 2 மேசைக்கரண்ட்இ ஒலிவ் எண்ணேய் சேர்த்து அதனை முடியின் எல்லா பகுதிகளிற்கு தடவி மசாஜ் செய்து கொள்ளவும். 1 அல்லது 2 மணி நேரத்தின் பின் சம்போ பயன்படுத்தி குளிக்கவும். வாரத்திற்கு ஒரு தடவை இதனை செய்வதனால் முடியின் ஈரலிப்பும் ஆரோக்கியமும் பேணப்படும்.

2. மயோனைஸ் மற்றும் முட்டை.
இரண்டு முட்டையுடன் இரண்டு மேசைக்கரண்டடி மயோனைஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் 1 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய் கலந்து முடியின் வேரில் இருந்து நுனி வரை தடவி 20 நிமிடங்களின் பின் சல்பேற் அற்ற சம்போ பயன்ப்டுத்தி குளிக்கவும். இதனை வாரத்திற்கு ஒரு தடவை செய்வது சிறந்தது.

3. முட்டையும் தேனும்.
ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் 2 மேசைக்கரண்டி தேனைக் கலந்து கொள்ளவும். அதனை தலை முழுவதும் தடவி சவர் கப்பினால் மூடி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். தேன் முடியின் வேர்ப்பகுதிகளிற்கு வலிமையைத் தருவதுடன், அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்கின்றது. இதனை வாரத்திற்கு ஒரு தடவை செய்வது சிறந்தது.


4. முட்டையுஒம் தேங்காய் எண்ணெய்யும்.
ஒரு முட்டை மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அதில் 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை மெதுவாக சேர்த்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையுடன் 1 மேசைக்கரண்டி தேனை சேர்த்து தலை முடி முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும். 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். அதிக எண்ணெய்த் தன்மை இருந்தால் சம்ப்பொ பயன்படுத்தலாம் இல்லையெனில் அதனை தவிர்க்கலாம்.

5. முட்டையும் தயிரும்.
¼ கப் தயிரில் ஒரு முட்டையை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். சம்போ பயன்படுத்திய பின்பு இதனை தலை முழுவதும் தடவி 5 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

6. விநாகிரியும் முட்டையும்.
பாத்திரம் ஒன்றில் முட்டை மஞ்சள் கருவை எடுத்து அதில் 4 மேசைக்கரண்டி விநாகிரி, 2 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு எடுத்து கலந்து கொள்ளவும். இதனை முடியின் எல்லா பகுதிகளிற்கும் தடவி கழுவிக் கொள்ளவும். வாரத்திற்கு ஒரு தடவை இதனை செய்வதனால் மென்மையான கூந்தலைப் பெற முடியும்.

7. பாதாம் எண்ணெய்யும் முட்டையும்.
பாதாம் எண்ணேய்யும் முட்டை மற்றும் தேனை பாத்திரம் ஒன்றில் எடுத்து கல்ந்து கொள்ளவும் அந்தக் கலவையை முடியின் வேரிலிருந்து நுனி வரை விரல்களால் நன்றாக தடவவும். உலர்வதற்காக 30 நிமிடங்கள் விட்ட பின்பு நீரினால் கழுவவும். அத்துடன் சல்பேற் அற்ற சம்போ பயன்படுத்துவது சிறந்தது.

8. விட்டமின் ஈ காப்ஸ்யூலுடன் முட்டை:
இரண்டு முட்டை மஞ்சள் கருவுடன் இரண்டு விட்டமின் ஈ காப்ஸ்யூல் கலந்து எடுத்துக் கொள்ளவும். அதனை தலை மற்றும் முடிக்கு தடவி 30 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!