கணவரின் பிறந்தநாளுக்கு சமந்தா கொடுத்த காதல் பரிசு

நடிகை சமந்தாவுக்கு அண்மை காலமாக நல்ல காலம் தான். அவரின் நடிப்பில் வந்த மகாநதி (தமிழில் நடிகையர் திலகம்) மெகா ஹிட்டாகி நல்ல வசூல் கொடுத்தது.

அதற்கு அடுத்து சோலோ ஹீரோயினாக நடித்த யூ டர்ன் படம் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. பிறகு அவர் விஜய் சேதுபதியுடன் யூடர்ன் படத்தில் நடித்திருந்தார்.

நேற்று சமந்தாவின் கணவர் நடிகர் நாகசைதன்யா தன் பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார். அவருக்கு சமந்தா முத்தம் கொடுத்து தன் அன்பு பரிசை கொடுத்துள்ளார்.

மேலும் அவர் இந்த நிகழ்வை Blur புகைப்படமாக எடுத்து என் நண்பன், என் ஆசிரியர், என் ஆன்மா, எனக்கான ஒரு பிறப்பு என கூறியுள்ளார்.

இதேபோல் சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது சமந்தா நாக சைதன்யாவுக்கு பிஎம்டபிள்யு கார் ஒன்றை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.