கொலைகாரனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை…

மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய எழில்மிக்க நாடுதான் கவுதமலா.இந்நாட்டில் உள்ள ஒரு குட்டி கிராமத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டின் போது சர்வதிகாரி எப்ராயின் என்பவரை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராடினர்.

பின் அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மாயா என்ற மக்களை கொத்துக்கொத்தாகக் கொல்லச் சொல்லி தன் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார் சர்வதிகாரி எப்ராயின் .

36 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் மக்கள் 201 பேர் கொல்லப்பட்டனர்.

1996 ஆம் ஆண்டில் இப்போர் முடிவுக்கு வந்தது. அதன் பின் உள்நாட்டுப்போருக்கு காரணமானவரும் முன்னாள் ராணுவ சாண்டோ லேபஸ் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.

கவுதமலா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் சாண்டோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 171 பேரைக் கொன்றதும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சாண்டோவுன் தீர்ப்பினை வாசித்த நீதிபதி ஒரு கொலைக்கு 30 ஆண்டுகள் வீதம் 171 கொலைக்கு சேர்த்து மொத்தம் 5130 ஆண்டுகள் வழங்கப்பட்டது.

கவுதமலா நாட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை இதுவாகும். – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.