தமிழகத்தையே புரட்டி போட போகும் புயல், கடல் சீற்றம் பற்றி எச்சரிக்கும் பஞ்சாங்கம்!!


புயல்,வெள்ளச் சேதம், அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஹேவிளம்பி வருடத்திய ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் முன்பே கணிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் குமரியை மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடியை உலுக்கி வருகிறது.

புயல், மழை, நிலநடுக்கம் பற்றி சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

ஹேவிளம்பி வருடத்திய ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் இந்த புயல், வெள்ளச் சேதம், பாதிப்பு பற்றியும், பூமி அதிர்வு, நிலநடுக்கம் பற்றியும் சில மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு முக்குறுணி மழை பெய்யும். 10 பங்கு சமுத்திரத்திலும் 6 பங்கு காடுகளிலும் 4 பங்கு பூமியிலும் பெய்யும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றங்களும் ஏற்படும்.

கடலை ஒட்டிய நகரங்களான பாண்டிச்சேரி, சென்னை, நாகை, காரைக்கால், கன்னியாகுமரி, திருச்செந்தூர், ஆகிய பகுதிகளில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

மக்களுக்கு பொருட் சேதம், உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

Source: tamil.oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!