தமிழக கடலோரத்தை நெருங்குகின்றது அடுத்த புயல்..!! பீதியில் மக்கள்..!!


‘கஜா’ புயல் தாண்டவமாடி பல மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றநிலையில் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (20-ந்தேதி) தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் நிலைகொள்ளக்கூடும். இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று வானிலை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யத் தொடங்கும். 20,21,22 ஆகிய தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (20-ந்தேதி) தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனால் மீனவர்கள் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்றார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!