‘வந்தது மாட்டிறைச்சி அல்ல.. நாய் இறைச்சி’ – ரயில் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி..!!


சென்னையில் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் விற்கப்பட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் பரவின. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு உணவகங்களில் சோதனையை மேற்கொண்டனர். சில இடங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து வெளியூர்களிலிருந்து கொண்டுவரப்படும் இறைச்சிகள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு ஜோத்பூரிலிருந்து மாட்டிறைச்சிகள் வந்து இறங்கின. இதை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

முதலில் அவை மாட்டிறைச்சிகள் எனத் தெரிவிக்கப்பட்டன. பதப்படுத்தப்பட்ட பெட்டியைத் திறந்து பார்த்தபோது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவை அனைத்தும் நாய் இறைச்சிகள் எனத் தெரியவந்தது. சென்னையில் உள்ள தனியார் உணவகங்களுக்கு சப்ளை செய்வதற்குக் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகளின் முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.source-vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.