ஆடைகளை களைந்து ஆபாச நடனம் ஆடிய 4 திருநங்கைகளுக்கு நடந்த விபரீதம்..!


புதுடெல்லியில் சிக்னேச்சர் என்ற புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களில் சிலர் ஆபத்து நிறைந்த வகையில் செல்பி எடுத்து வந்தனர். விதிகளை மீறியவர்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் திருநங்கைகள் 4 பேர் புதிய பாலத்திற்கு வந்து தங்களது ஆடைகளை களைந்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள் பொதுமக்கள் முன் நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் கிடைத்த பின்னர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருநங்கைகள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த சரியான தேதி பற்றி அறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பாலத்தில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!