2 வயசு மருமகனை காப்பாற்றிய 12 வயசு மாமா – பின்ணனியில் நடந்தது என்ன..?


12 வயசு மாமாவின் வீர செயல்தான் இந்த செய்தி!! ஆம்.. இந்த மாமா 2 வயசு குழந்தையையே காப்பாற்றி இருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!!

மகாராஷ்டிராவில் மும்ப்ரா என்ற இடம் உள்ளது. இங்கு வீடு ஒன்றில் ஒரு கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. வெளியில் பந்தல், உள்ளிட்ட அலங்காரங்கள், தோரணங்கள் என அந்த தெருவே கலர்ஃபுல்லாக இருந்தது.

கல்யாணம் முடிந்து எல்லாரும் சாப்பிட்டனர். அப்போது வீட்டுக்கு வெளியில் 2 வயது ஆண் குழந்தையை வைத்து 2 பேர் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அந்த குழந்தையின் அண்ணன், இன்னொருவர் மாமா. அண்ணனுக்கு வயது 10, மாமாவுக்கு வயது 12.

3 பேரும் விளையாடி கொண்டிருந்தபோது, பெரியவர்கள் யாரும் அங்கே இல்லை. அந்த நேரம் பார்த்து ஒருபெண் அங்கு வந்து விளையாடுவதை பார்த்து கொண்டே இருந்தார். பிறகு 2 வயது ஆண் குழந்தை சற்று தூரமாக நடக்க ஆரம்பித்ததும், நைசாக குழந்தையிடம் பேசி கடத்த முயன்றார். இதை 12 வயது மாமா பார்த்துவிட்டார்.

அந்த பெண்ணிடம் ஓடிச்சென்ற மாமா, “குழந்தையை எங்க தூக்கிட்டு போறீங்க?” என்றகேட்டார். இப்படி ஒரு கேள்வியை அந்த பெண் எதிர்பார்க்கவில்லை. அதனால், “தம்பிக்கு சாக்லட் வாங்கி தர போகிறேன்” என்றார்.


இதைக் கேட்டதும் மாமாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. யார் சாக்லட் கொடுத்தாலும் வாங்க கூடாது என்று வீட்டில் பெற்றவர்கள் ஏற்கனவே சொன்னது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

அதனால் குழந்தையின் அண்ணனிடம் சென்று, சாக்லட் சமாச்சாரத்தை சொன்னார். உடனே அண்ணனும் அந்த பெண்ணை விரட்டி வந்து “என் தம்பியை எங்க தூக்கிட்டு போறீங்க?” என்று மாமா கேட்ட கேள்வியை கேட்டார். இதனால் உஷாராகிவிட்ட அந்த பெண், குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார். இதை பார்த்ததும் மாமாவும் அண்ணனும் அந்த பெண்ணை விரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதில், கடைசி வரை அண்ணன் அந்த பெண்மணியை விடவே இல்லை. கிட்டத்தட்ட 8 நிமிடம் துரத்தி ஓடியிருக்கிறார். பின்னர் ஓட முடியவில்லையோ, அல்லது என்ன காரணமோ தெரியவில்லை, அந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு அந்த பெண் ஓடிவிட்டார். பிறகு அண்ணன் தன் தம்பியை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதை வைத்து அந்த சாக்லட் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். குழந்தை அண்ணன் மீட்டாலும், அதற்கு முக்கிய காரணமாக இருந்த நம்ம மாமாவுக்கு குடும்பத்தினர் நிறைய முத்தங்களை தந்தார்கள்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!