தமிழ் ரசிகர்களிடம் திடீர் பிரபலமாகிய செய்தி வாசிப்பாளர் அனிதா – வைரலான வீடியோ..!


ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் பிரபலமாக திகழ்வர். அவ்வாறு பிரபலமாக இருப்பவர்கள் சினிமா துறையில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றில்லை, சாதாரண நபராக கூட இருக்கலாம்.

அப்படித்தான் தற்போது பல ரசிகர்களின் மனதை கவர்ந்து டாப் டிரெண்டிங்கில் இருப்பவர் அனிதா. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் ஆர்மியே உள்ளது.

ஆனால் இவரது சமூக வலைத்தள கணக்குகள் எதுவும் வெளிப்படையாக இல்லாததால் ரசிகர்கள் குழம்பியிருந்தனர். இந்நிலையில் தான் அவரது பெயரில் அதிகாரபூர்வ ஐடி ஒன்று ட்விட்டரில் அனிதாவால் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஐடியில் இருந்து முதல் டப்மேஷாக அனிதா செய்திருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. வெளியாகி சிறிது நேரம் தான் ஆகியிருக்கும் நிலையில் இந்த வீடியோவிற்கு தற்போதுவரை பல ஆயிரம் லைக்ஸ்கள் குவிந்து கொண்டு வருகின்றன.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!