உயிருக்கு போராடிய நெல் ஜெயராமனை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்…!


நீங்க முதல்ல நலமாகி வாங்கண்ணே… என்று சிவகார்த்திகேயன் சொன்னதும்.. கண்கலங்கியே போய்விட்டார் நெல்.ஜெயராமன்

நிறைய புது புது விஷயங்களை சத்தமே இல்லாமல் பண்ணி வருகிறார் மனுஷன்! “மோதி மிதித்து விடு பாப்பா” என்ற குறும்படத்தில் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்பதை பற்றி விழிப்புணர்வு அளிக்கும் விதத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தில் காசு கூட வாங்காமல் அவர் நடித்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, அழிந்து வரும் இந்தியாவின் தேசிய விலங்கான அனு என்கிற 10 வயது வெள்ளை நிற புலிக்குட்டி ஒன்றினை தத்தெடுத்தார்.

வரப்போகிற ஆறு மாதங்களுக்கும் இந்த அனுவை சிவகார்த்திகேயன்தான் கவனித்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு, அவரது சார்பில் 2.12 லட்சம் ரூபாய் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளிக்கப்பட்டது. இப்போது புற்றுநோய் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும் ‘நெல்’ ஜெயராமனை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக அவதிப்பட்டு வரும் நெல் ஜெயராமனை அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நாள்தோறும் சென்று பார்த்து வருகிறது. தங்களால் முடிந்தவரை உதவிகளையும் செய்து வருகிறார்கள். தற்போது சிவகார்த்திகேயனும் நெல் ஜெயராமனை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தினை இயக்குனர் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்” என்றார் நெல்_ஜெயராமன். தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் “நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை” என்றார்.


ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்! என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த பதிலைக் கேட்டு கண்கலங்கி போய்விட்டாராம் நெல் ஜெயராமன்.

“என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்” என்றார் #நெல்_ஜெயராமன்
தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் “நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை” என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!

மேலும் “நெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு முழுப் பொறுப்பேற்ற சிவகார்த்திகேயன், இன்னொரு பேருதவியையும் செய்திருக்கிறார். ஜெயராமன் மகனின் முழு படிப்பு செலவையும் அவர் படிக்கும் காலம் முழுக்க ஏற்பதாக சொல்லி இருக்கிறார். படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் விவசாயம் காக்கும் மனசு மகத்தானது!” என்று மற்றொரு ட்விட்டர் பதியப்பட்டுள்ளது.

இந்த ட்விட்டர் பதிவுகள் அனைவரையுமே நெகிழ வைத்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜெயராமனின் சிகிச்சை செலவு ஏற்றதையும், நேரில் பார்த்து ஆறுதல் சொன்னதையும், அதைக் கேட்டு ஜெயராமன் கண்கலங்கியதையும், பின்னர் மகனின் படிப்பு செலவை ஏற்றதையும் அறிந்து ட்விட்டர்வாசிகள் மனம் உருகிவிட்டனர்.

சிவகார்த்திகேயன் எதை செய்தாலும் அது விளம்பரம் என்று வாய்கூசாமல் விமர்சனம் செய்யப்பட்டே வருகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும், எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தனது மனித நேயத்தை வெளிப்படுத்தி வரும் சிவகார்த்திகேயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! ஆயிரம் சொல்லுங்க.. இதுக்கெல்லாம் மனசுன்னு ஒன்னு வேணும்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!