சீனாவில் வெறும் 5 நிமிடத்தில் ரூ.20,000 கோடி சம்பாதிக்கும் அலிபாபா…!


சீனாவை சேர்ந்த அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெறும் ஐந்து நிமிடத்தில் ரூ.20 ஆயிரம் கோடியை சம்பாதித்து இருக்கிறது.

உலகம் முழுக்க அமேசானும், வால் மார்ட்டும் இணையத்தில் மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களாக இருக்கிறது. இந்தியாவில் அமேசான் மற்றும் பிளிப்கார்டிற்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சீனாவின் நிலைமையே வேறு. அங்கு தனியாளாக ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடம் வகிக்கிறது. மொத்தமாக உலக அளவில் அலிபாபா நிறுவனம் நம்பர் 1 நிறுவனமாகவும் இருக்கிறது

அலிபாபா நிறுவனத்தை தொடங்கிய ஜாக் மா, எல்லா வருடமும் 11ம் தேதி 11ம் மாதம் மிகப்பெரிய ஆபர்களை அறிவிப்பார். இந்தியாவில் நடக்கும் சீசன் சேல் போல இந்த விற்பனை நடக்கும். இந்த நிலையில் சீனாவில் இன்றும் இந்த விற்பனை நிறைய ஆபர்களுடன், நிறைய தள்ளுபடிகளுடன் நடந்தது.


இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு விற்பனை தொடங்கி ஐந்து நிமிடத்தில் வேகமாக பொருட்கள் விற்று தீர்ந்தது. சீனா முழுக்க பல கோடி மக்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் அலிபாபா நிறுவனம் வெறும் ஐந்து நிமிடத்தில் ரூ.20 ஆயிரம் கோடியை சம்பாதித்து இருக்கிறது.

இப்போதும் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. 1 மணி நேரம் வரை விற்பனை அசுரர் வேகத்தில் நடந்து இருக்கிறது. 1 மணி நேர முடிவில் ரூபாய் 70 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்து உள்ளது. இன்று மாலைக்குள் இது நான்கு மடங்கு விற்பனை செய்யப்படும் என்று அலிபாபா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சென்ற வருடம் இதேநாளில் அலிபாபா நிறுவனம் 1.8 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டியது. இந்த வருடம் அதைவிட பல மடங்கு வருமானம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதில் ஆப்பிள் நிறுவனமும், சியோனி நிறுவனமும் அதிக அளவில் பொருட்களை விற்று இருக்கிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!