இந்திரா காந்தி மூக்கை பொத்திகொண்டு சென்றது ஏன்? கிண்டல் செய்த மோடி..!!


இந்திரா காந்தி மோர்பி தொகுதிக்கு வந்தபோது தான் வைத்து இருந்து கர்சிப்பை எடுத்து மூக்கை பொத்திக்கொண்டார் என மோர்பி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார். ஆனால் அவர் எதற்காக மூக்கை பொத்திக்கொண்டு சென்றார் என விளக்கம் வெளியாகி உள்ளது.

மோர்பி தொகுதியில் இந்திரா காந்தி மூக்கை பொத்திகொண்டு சென்றது உண்மை தான் என்றும் ஏன் அவ்வாறு சென்றார் என்ற விளக்கம் கூறப்பட்டுள்ளது.


மோர்பி தொகுதியில் உள்ள மோர்ச்சா அணை ஆகஸ்ட் 11, 1979 -ம் ஆண்டு உடைந்து அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். விலங்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஆங்காங்கே மனித உடல்கள் சிதைந்து காணப்பட்டது. இந்த சம்பவத்தை அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆகஸ்ட் 16 ம் தேதி மோர்பி தொகுதியில் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அந்த் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது அத்னால் அவர் தனது மூக்கை பொத்திகொண்டு செல்லும் காட்சியை சித்ரலேகா பத்திரிகை இதழ் 1979 ஆகஸ்ட் 27 ம் தேதி வெளியிட்டு இருந்தது. தற்போது இது குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.