டயானா புகைப்படங்களில் எதற்காக தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா..?


பிரித்தானிய இளவரசி டயானாவின் புகைப்படங்களை நீங்கள் உற்று கவனித்தால் பெரும்பாலான படங்களில் அவர் தனது தலையை குனிந்தவாறே இருப்பதைக் காணலாம். அது ஏன் என்ற கேள்விக்கு புத்தகம் ஒன்றில் அவரே பதிலளித்துள்ளார்.

இளவரசர் சார்லசை திருமணம் செய்து முதன்முறையாக பொதுமக்கள் முன் தோன்றியபோது நான் என் தலையை குனிந்து கொண்டேன்.

நான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டதாக பலரும் நினைத்திருக்கலாம், ஆனால் அது உண்மையில்லை, நான் எனக்குள் பயந்தேன்.

என் மீது செலுத்தப்படும் கவனம் எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. அந்த பயத்திலிருந்து வெளிவர எனக்கு ஆறு ஆண்டுகள் ஆயிற்று என்று டயானா கூறியதாக அவரது சுய சரிதை புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது.

முந்தின தினம் வரை நான் ஒரு சாதாரண நர்ஸரி பள்ளி ஆசிரியை. அடுத்த நாள் நான் ஒரு பிரித்தானிய இளவரசி.

திடீரென என்னால் ராஜ குடும்பத்தினராக மாற கடினமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் அவர்.

இன்னொரு பக்கம் அரண்மனையில் பொறுப்பான பதவியிலிருக்கும் ஒருவர், டயானா ஏன் குனிந்த தலையுடனேயே இருந்தார் என்பதற்கு காரணம் கூறுகிறார். அது டயானாவின் உயரம், அவர் 5 அடி 10 அங்குல உயரம்.

ஆகவே தன்னுடன் பேசுபவர்கள் தாழ்வாக எண்ணக்கூடாது என்னும் நல்ல நோக்கத்திற்காகவே எல்லா புகைப்படங்களிலும் அவர் தலை குனிந்தவாறே இருக்கிறார் என்கிறார் அவர்.source-lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!