காலை 7 மணி – இரவு 7 மணி வரை நைட்டி அணிந்தால் அபராதம்..! கிராமத்தில் விசித்திர உத்தரவு..!


நைட்டி என்பது இரவில் மட்டும் அணியும் உடை என்பது மாறி பகலிலும் பெண்கள் நைட்டி அணிந்து கடை வீதிக்கு வருவது கடந்த சில வருடங்களாக சகஜமாகி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள நிர்வாகிகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிந்து வெளியே வந்தால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் என உத்தரவிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தோக்கலபள்ளி என்ற கிராமத்தில் வாடி சமூகத்தை மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு நிர்வாகிகளாக சமிபத்தில் புதியதாக 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

கிராமத்து நிர்வாகிகளாக பதவியேற்றதும் இவர்கள் போட்ட முதல் நிபந்தனை இரவில் மட்டுமே பெண்கள் நைட்டி அணிய வேண்டும் என்பதுதான். பகலில் நைட்டி அணிந்து வீதிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் என்றும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் அக்கிராம பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் நிர்வாகிகள் முன் பெண்கள் யாரும் இந்த நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.-source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!