கூகுளில் சன்னிலியோனை தேடாமல் கோமளவள்ளியை தேடிய மக்கள்..!


சர்கார் படத்தில் பழ கருப்பையா முதல்–அமைச்சராகவும், ராதாரவி அமைச்சராகவும் வருகிறார்கள். பழ கருப்பையா மகளாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என்று பெயரிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் இவர் சென்னை வந்து தந்தைக்கு ஆதரவாக அரசியலில் குதித்து விஜய்யை எதிர்ப்பது போன்று காட்சி வைத்துள்ளனர். கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர் என்றும், அவரை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த பெயரை வைத்து இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘கதையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தேவையில்லாமல் அந்த பெயரை ஏன் வைக்க வேண்டும்? எத்தனையோ பெயர்கள் இருக்கும்போது அந்த பெயரை மட்டும் வைத்து இருப்பதை காழ்ப்புணர்ச்சியாகவும், கொச்சைப்படுத்தும் செயலாகவுமே பார்க்கிறோம்’’ என்றார்.

ஆனால் டி.டி.வி.தினகரன் கூறும்போது, ‘கோமளவள்ளி என்பது ஜெயலலிதா பெயர் இல்லை. இதனை ஜெயலலிதாவே என்னிடம் தெரிவித்தார்’ என்றார்.

இந்த சர்ச்சையால் கோமளவள்ளி பெயரை கூகுளில் அதிகமானோர் தேடி வருகிறார்கள். கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர்தானா? கோமளவள்ளி என்பதன் அர்த்தம் என்ன? சர்காருக்கும், கோமளவள்ளிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்விகளோடு கூகுளில் இந்த தேடுதல் நடந்துள்ளது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!