‘சர்கார்’ பட சர்ச்சை – எடப்பாடியை சந்திக்கிறார் விஜய்..?


சர்கார்’ பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி மற்றும் வரலக்ஷமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. பின்னர் அதையெல்லாம் கடந்து தீபாவளி தினமான கடந்த நவம்பர் 6-ம் தேதி வெளியானது.

இந்த படத்தில் தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வரை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நடிகர் விஜய் மற்றும் ‘சர்கார்’ திரைப்படத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் ‘சர்கார்’ பேனர் கிழிப்பு, திரையரங்கு முற்றுகை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘சர்கார்’ பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ‘தலைவா’ மற்றும் ‘மெர்சல்’ பட பிரச்னையின் போது நடிகர் விஜய் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-source : eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!