சீரற்ற காலநிலையால் மின்சார மீள் இணைப்பு பணிகள் தாமதமாகுமாம்…!


மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்றபட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்றகால நிலையையடுத்து மரங்கள் முறிந்து மின்சாரக்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ள கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீளவழங்குவதில் தாமதமேற்பட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகால நிலையினால் குறித்த மின்சார மீள் இணைப்பு பணிகள் தாமதமைடைந்துள்ளதாக மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!