போயஸ் கார்டனில் தீபாவளியன்று ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்..!


நான் அரசியலுக்கு வருவது உறுதி’, என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், அதற்கான பணிகளையும் முன்னெடுத்தார். தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்தார். மேலும் மன்ற நிர்வாகிகளுக்கான கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் அறிவித்தார்.

அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த பணிகள் ஒரு புறம் இருந்தாலும், சினிமா மீதான அவரது கவனமும் குறையவில்லை. ஷங்கர் டைரக்‌ஷனில் ‘2.0’ நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி அவரது நடிப்பில் ‘பேட்ட’ படம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் தீபாவளியன்று அவருக்கு வாழ்த்து சொல்ல சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்தனர். அப்போது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!