பெற்றவளை இதயத்தில் மட்டுமில்லை… இப்படியும் தாங்கலாம் – வைரலான புகைப்படம்..!


சீனாவில் நான்சாங் என்ற இடத்தில் ஒருவர் தன் அம்மாவை கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அந்த அம்மாவுக்கு வயது 84 ஆகிறதாம். ரொம்பவும் தள்ளாடி தள்ளாடி நடக்க முடியாமல்தான் ஆஸ்பத்திரிக்குள்ளேயே நுழைந்தார்.

ஆனால் ஆஸ்பத்திரி ஹாலில் உட்கார சேர் இல்லை. அதுவும் இல்லாமல் டாக்டர்கள் வர நேரமாகும் என்று சொல்லிவிட்டார்கள். அம்மாவும் டாக்டர் வரும்வரை புத்தகம் படிக்க வேண்டும் ஆசைப்பட்டார். அதுவரை அம்மாவை நிற்க வைக்க முடியாமல் மகன் சேரை தேடி இங்கும் அங்கும் ஓடினார்.

தேடி பார்த்தும் நாற்காலி எங்குமே கிடைக்காததால், தன் அம்மாவை உட்கார வைக்க தன் முதுகையே சேர் போல மாற்றி குனிந்து கொண்டார். அவர் முதுகில் அந்த அம்மா ஏறி உட்கார்ந்து கொள்கிறார்.

கொஞ்ச நேரம்கூட தன் தாயை நிற்க வைக்க மனசில்லாத மகன், இப்படி தன் முதுகையே சேராக மாற்றி இடம் அளித்தது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மகன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ள, அவர் முதுகு மீது அம்மா உட்கார்ந்து கொள்வதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓடிச்சென்று அந்த அம்மாவுக்கு ஒரு சக்கர நாற்காலியை கொண்டு வந்து கொடுத்தார்கள்.

இதை பற்றி மகன் சொல்லும்போது, “இதெல்லாம் என்ன பிரமாதமான விஷயமா? நான் குழந்தையா இருக்கும்போது எங்க அம்மா என்னை எத்தனை முறை தாங்கி பிடிச்சிருப்பாங்க” என்றார்.

பெற்றவளை இதயத்தில் மட்டுமில்லை… இப்படியும் தாங்கலாம் என்பதை சொல்லும் படம்தான் இது.-source : oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!