மைத்திரி – மனோ கணேசன் திடீர் சந்திப்பு.. எதற்காக தெரியுமா..?


இலங்கையில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படுகின்ற விடயமாக கட்சி உறுப்பினர்களை பேரம் பேசும் விடயம் காணப்படுகின்றது.

காலையில் ஒரு கட்சியில் இருப்பவர்கள் மாலையில் வேறு கட்சியில் இணைந்து அமைச்சுப்பதவிகளில் இருக்கின்றமை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

எதிர்பார்க்க முடியாத கட்சித்தாவல்களும், பேரம் பேசும் நடவடிக்கைகளும் அடுத்தடுத்து நடைபெறுகின்றன.

இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போட்டியாகவே இது அமைந்துள்ளது.

அந்த வகையில் இரு பிரிவுகளாக உள்ள மைத்திரி – ரணில் அரசும், ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சியும் தமது பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபிப்பதற்கு தயாராகி வருகின்றன.

அதற்காகவே இந்த பேரம் பேசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் இழுப்பதே இவர்களது முக்கிய தேவையாக உள்ளது.

அந்த வகையில் அண்மையில் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி – மஹிந்த தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து தற்போது முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் பக்கம் இவர்களது பார்வை திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்ன? என்பது தொடர்பில் அறிந்து கொள்ள தற்போது அனைத்து தரப்பினரும் மும்முரமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.source-netrigun

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!