துணை மந்திரி மனுஷா நாணயக்காரா ராஜினாமா – இலங்கை அரசியலில் குழப்பம்..!


இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை பதவிநீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், பிரதமராக தாமே நீடிப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே மற்றும் இதர கட்சிகளில் இருந்து எம்.பி.க்களை விலைக்கு வாங்க ராஜபக்சே பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்தடுத்து, அதிரடியாக இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை துணை மந்திரி மனுஷா நாணயக்காரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பியுள்ள மனுஷா, ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.-source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!