அழகினை அதிகப்படுத்த புதினா இலையை இப்படி யூஸ் பண்ணுங்க..!


புதினாவை சமையலில் வாசனைத் திரவியமாகப் பயன்படுத்திய உங்களுக்கு அதனைஅழகிற்குப் பயன்படுத்த முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உண்மையில் இது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விதத்தில் உதவி புரிகிறது.

இந்தியா போன்ற இடங்களில் இலகுவாகக் கிடைக்கும் இந்த புதினா இலைக்கு வீக்கம், வலி, நுண்ணம்க்கித் தொற்றுக்கள், ஒக்ஸிஜன் தாக்கத்திற்கு எதிராகச் செயற்படும் தன்மை போன்ற பண்புகள் உள்ளது.இதனால் சருமம் மற்றும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிற்கு இலகுவான தீர்வைத் தருகிறது.

புதினாவை மொய்ஸ்டரைசர், கிளன்சர், லிப்பாம், சம்போ போன்றவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். இது சருமத்திற்கு குளிர்மையைத் தருவதுடன் பல்வேறு நன்மைகளையும் செய்து வருகிறது.

அழகிற்கு புதினா இலையைப் பயன்படுத்துவது எப்படி?

1. கருமுள்(blackheads) நீக்குவதற்கு.
புதினா இலையை எடுத்து நீரில் அவிக்கவும். அதனை சிறிதளவு நீருடன் அரைத்து எடுத்து மஞ்சளை சேர்த்துக் கொள்ளவும். அந்தக் கலவையை விரலினால் சருமத்தில் பூசி சிறிது நேரத்தில் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்து வரவும்.

2. பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு.
சிறிதஅவு புதினா இலையை எடுத்து அரைத்துக் கொள்ளவும். அதனை பாதிக்கப்பட்ட இடத்திற்கு அல்லது முகம் முழுவதும் பூசி சிறிது நேரத்தின் பின் நீரினால் கழுவவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதனால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

3. வெண்மையான சருமத்திற்கு.
புதினாவில் உள்ள அண்டிஒக்ஸிடன் சருமத்தின் இறந்த கலங்கள் மற்றும் பக்டீரியாத் தொற்றுக்களை நீக்கி ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் வைத்திருக்க உதவும். புதினா இலையை எடுத்து அரைத்து அதில சிறிதளவு மஞ்சள் மற்றும் றோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

4. சருமச் சுருக்கத்தைப் போக்குவதற்கு.
சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் மெல்லிய கோடுகளையும் புதினா இலையால் நீக்க முடியும். புதினா இலையை அவித்து அதன் சாற்றை எடுத்து முகத்தில் பூசி வரவும்.

5. கடிகளை போக்குவதற்கு.
சரும வீக்கம், ஒவ்வாமை மற்றும் எரிச்சலால் ஏற்படும் கடிகளைப் போக்கும் ஆற்றல் புதினா இலைக்கு உள்ளது. கடிகளை ஏற்படுத்தும் பக்டீரியாக்களை அழிப்பதற்கு புதினா இலையை அரைத்து பூசிக் கொள்ளவும்.

6. முடி உதிர்வைத் தடுப்பதற்கு.
புதினா இலையை அவித்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும். 20 நிமிடங்கள் வரை அவிப்பதனால் முழுமையாக சாற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த சாற்றினை ஆற வைத்து அதனை முடி மற்றும் தலைப் பகுதிகளிற்கு பூசி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். சிறிது நேரத்தின் பின்பு நீரினால் கழுவவும்.

7. தலையில் உள்ள தொற்றுக்களைக் குணப்படுத்துவதற்கு.
புதினா இலையை அவித்த சாற்றை எடுத்து தலையில் பூசி மசாஜ் செய்யவும். 25 நிமிடங்களின் பின் குளிர்ந்த நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வதனால் தொற்றுக்களில் இருந்து தீர்வைப் பெற முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!