பாராளுமன்றம் நவம்பர் 14ம் தேதி கூடுகிறது – சிறிசேனா அறிவிப்பு…!


இலங்கை அதிபராக பதவி வகிக்கும் மைத்ரிபால சிறிசேனா, பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கினார்.

மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் பாராளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார்.

அதிபரின் இந்த முடிவுக்கு ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்தி வந்தம.

இதற்கிடையே, இலங்கை பாராளுமன்றம் 7-ம் தேதி கூடும் என தகவல் வெளியானது. ஆனாலும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதால் பாராளுமன்றம் கூடுவதில் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், இலங்கை பாராளுமன்றம் 14-ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவரது செயலாளர் உதய சேனவிரத்னே மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதிபரின் இந்த உத்தரவால் இலங்கை பாராளுமன்றம் கூடுவதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.-source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!