கருப்பு உதடுகளை நிரந்தரமாக ரோஜா பூ நிறமாக்க வீட்டில் இப்படி செய்யுங்க..!


அழகிய புன்னகைக்கு முத்துப் போன்ற பற்கள் இருந்தால் மட்டும் போதாது. ஒருங்கே வசீகரமான உதடுகளும் தேவை. சிலரின் உதடுகள் பார்ப்பதற்கு அவ்வளவு வசீகரமாகத் தோன்றாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

மதுசாரம் அருந்துதல், புகைப்பிடித்தல், போதியளவு நீர் அருந்தாமை என்பன இதற்கான சில உதாரணங்களாகும். முதலில் உதடுகள் வசீகரத் தன்மையை இழக்கக் காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.

இருப்பினும் வசீகரத்தை இழந்த உதடுகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வு காண முடியும். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

01. தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்
ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் அரைத் தேக்கரண்டி எலுமிச்சம் சாறு என்பவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை உதடுகளில் பூசி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம், உதடுகள் அழகாகத் தோன்றும்.

02. அலோவெரா ஜெல் மாஸ்க்
கற்றாளை இலை ஒன்றை எடுத்து அதன் தோலை சீவி அதிலுள்ள சாறை எடுத்து அதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை கலக்க வேண்டும். பின்னர் இந்தக் கலவையை உதடுகளில் பூசிவர உதடுகள் அழகாகும். இந்தக் கலவையை குளிரூட்டியில் வைத்து நெடுநாட்களுக்கு உபயோகிக்க வேண்டும்.


03. பால் மற்றும் மஞ்சள் தூள்
குளிரான பால் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கலவை போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை உதடுகள் மேல் பூசி அதனை 5 அல்லது 7 நிமிடங்களுக்கு அவ்வாறு வைக்க வேண்டும். குறித்த கலவை காய ஆரம்பித்ததும் அதனை ஸ்கிரபிங் செய்வது போல் தேய்த்து அகற்ற வேண்டும். பின்னர் அதனை வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும். வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக இவ்வாறு செய்ய வேண்டும்.

04. எஸ்.பி.எப்லிப் கன்டிஷனர்
சந்தையில் விற்கப்படும் எஸ்.பி.எப் கன்டிஷனர்களை உபயோகித்தல் வேண்டும். வெளியே செல்லும் முன்னர் இந்த கன்டிஷனர்களை பூசுவதன் மூலம் உதடுகள் பாதிப்படைவதை தடுக்க முடியும். எஸ்.பி.எப்கள் 15 தொடக்கம் 35 வரை காணப்படுகின்றன. பொதுவாக 15 இனை உபயோகிப்பது சிறந்தது. இருப்பினும் அதிக வெயில் கூடிய நாட்களில் அதற்கேற்ற எஸ்.பி.எப். களை உபயோகிப்பது சிறந்தது.

05. லிப் பாம்கள்
சந்தையில் விற்கப்படும் லிப்பாம்கள் உதடுகள் பாதிப்படைவதிலிருந்து தடுக்கின்றது. இந்த லிப்பாம்களை மணித்தியாலத்திற்கு ஒரு முறையாவது பூசிக் கொள்வதன் மூலம் உதடுகள் வறண்டு போவது தடுக்கப்படும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!