இந்திய விமானியின் நிறைவேறாத இறுதி ஆசை – கதறும் உறவுகள்..!


கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான விபத்தை ஓட்டிய இந்திய விமான குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து, நேற்று காலை 6.20 மணிக்கு பங்கல் பினாங் என்ற நகருக்குப் புறப்பட்ட லயன் ஏர் விமானம் மேற்கு ஜாவா தீவு கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உட்பட 189 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தை இந்தியாவை சேர்ந்த பைலட் பாவ்யே சுனேஜா என்பவரே இயக்கியுள்ளார்.

2011-ம் ஆண்டு முதல் `லயன் ஏர்’ விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுனேஜாவுக்கு 6000 மணி நேரங்கள் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு.

அந்தவகையில் மிகுந்த அனுபவமும், திறமையும் கொண்ட இவரை, இந்தியாவிலுள்ள பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம் வேலைக்கு எடுக்க முடிவெடுத்திருந்தது.

தன் சொந்த ஊரான டெல்லியிலேயே பணியமர வேண்டும் என்பது சுனேஜாவின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் இறந்துபோயுள்ளார்.

சுனேஜாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது, சொந்த ஊருக்கு வந்து, குடும்பத்தினருடன்தான் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்.

அதேபோல், இந்த ஆண்டும், வரும் வாரம் தீபாவளியைக் கொண்டாட, குடும்பத்தினரைச் சந்திக்க ஊருக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால், சுனேஜா பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துதான் குடும்பத்தினர் தெரிந்துகொண்டு கண்ணீர் சிந்தியுள்ளனர்.- Source: lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!