பொய்யை சொல்லி உயிரோடு இருப்பவரை கொலை செய்யாதீர்கள் – கோவை சரளா ஆவேசம்..!!


நடிகை கோவை சரளாவின் உடல்நிலை குறித்து சமீபத்தில் வதந்தி கிளம்பியது. அது தவறான செய்தி என சினிமா துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகள் பற்றி கோவை சரளா பேசியது… “என் உடல்நிலை பற்றி பலமுறை வதந்திகள் வெளியாகியிருக்கு. ஆரம்பத்தில் இந்த மாதிரியான வதந்திகள் வருத்தத்தை கொடுக்கும். அப்புறம், அதுக்காக வருத்தப்படறதில்லை.

என் சொந்தக்காரங்க வெளிநாட்டில் இருக்காங்க. அவங்களோடு தினமும் போனில் பேசுவேன். அடிக்கடி நேரில் போய் பார்ப்பேன். அவங்களும் என்னைப் பார்க்க சென்னைக்கு வருவாங்க. இப்போ, ‘தேவி 2’ படத்தில் நடிச்சுட்டிருக்கேன். அதுக்காக, ஒரு மாச ஷூட்டிங்காக மொரீசியஸ் போய்ட்டு சமீபத்தில்தான் வந்தேன்.


‘விஸ்வாசம்‘, ‘காஞ்சனா 3’ உள்பட நான்கு பெரிய படங்களில் நடிச்சுட்டிருக்கேன். இந்த படப்பிடிப்பு பரபரப்பினால் மற்ற வி‌ஷயங்களை பெரியதாக கவனிக்கிறதில்லை. இந்த நிலையில்தான், நான் டிரீட்மென்ட்டுக்காக வெளிநாடு போயிருக்கிறதாக தகவல் பரப்பியிருக்காங்க. சினிமாவில் பிரபலங்கள் பலரின் உடல்நிலை பற்றியும் அடிக்கடி வதந்தி பரப்புவதையே வாடிக்கையா வெச்சிருக்காங்க.

அதனால், அவங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது? நான் சீரியஸா இருக்கிறதாகவும், யாருமே ஆதரவுக்கு இல்லைனும் தகவல் பரப்பியிருக்காங்க. இப்படிப் பொய்யான செய்தியைச் சொல்றது, உயிரோடு இருப்பவரை கொலைச் செய்யறதுக்குச் சமம்” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!