நடிகர் விமலுடன் கழுத்தில் மாலையுடன் ஜூலி – வைரலாகும் புகைப்படம்…!!


பிரபல திரைப்பட நடிகரான விமலுடன், பிக்பாஸ் ஜுலி திருமண கோலத்தில் நடித்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜுலி, அதன் பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு பொய்கள் மக்கள் வெறுக்க காரணமாகிவிட்டது. அதன் பின் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜுலிக்கு விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என பல்வேறு வாய்ப்புகள் குவிந்தது.

இந்நிலையில் நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இது படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.