காதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தற்கொலை…!


திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (வயது 28). யோகா மாஸ்டரான இவர் 20 கிலோ எடையை நகத்தால் தூக்கி கின்னஸ் சாதனை படைத்தவர்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹேமச்சந்திரனின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நல்லூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என்று போலீசார் கூறினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!