வருங்கால கணவருடன் நெருக்கமாக காதல் மொழி பேசும் பிரியங்கா சோப்ரா!


முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தனது வருங்கால கணவர் நிக் ஜோசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகரான, நிக் ஜோன்சை பின்புறமாக கட்டிப்பிடித்தபடி, கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு என்று கொஞ்சும் மொழியை கண்களால் பேசியபடி, நெருக்கமாக காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிரியங்கா சோப்ராவின் காதல் மொழி ரசிக்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

நிக் ஜோன்ஸ், அமெரிக்காவின் பேவர்லி மலையில் பிரியங்கா சோப்ராவுக்காக 6.5 மில்லியன் டாலர் செலவில் புதிய வீடு வாங்கி உள்ளார். மழை உச்சியில் இருந்து தரைப்பகுதியை பார்க்கும் வகையில் வீடு உள்ளதாம். முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட இந்த வீட்டில் 5 பெட் ரூம்கள், மற்றும் வீட்டைச்சுற்றிலும் நீச்சல் குளமும் உள்ளதாம்.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!