மைத்திரியை கொல்ல சதி – இந்தியாவை மாட்டி விட்ட சீனா…!


இலங்கை போலீஸ் துறைக்கு ரகசிய தகவல் தெரிவிக்கும் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சேவையையும் கொல்ல டெலிபோனில் சதி திட்டம் தீட்டப்பட்டது. அது குறித்த தகவல்களை உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டேன் என தெரிவித்தார்.

இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த எம்.தாமஸ் என்பவர் கடந்த மாதம் செப்டம்பர் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார். எனவே அதிபர் சிறிசேனாவை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை அதிபர் சிறிசேனா மறுத்தார். பிரதமர் மோடியுடன் டெலிபோனில் பேசினார்.

ஆனால் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது குறித்த விசாரணையை இலங்கை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை சதி திட்டம் தீட்டியதற்கான டெலிபோன் உரையாடல்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சீன நிறுவனமான குயாவேயின் தொழில் நுட்ப உதவியுடன் டெலிபோன் உரையாடலை மீண்டும் பெற முயற்சி நடைபெற்றது. அதற்காக இலங்கை போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு செய்தனர்.

மனுவை விசாரித்த கோர்ட்டு சீன நிறுவனமான குயாவேயின் உதவியுடன் சதி திட்ட தகவல்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விசாரணையின் போது தாமஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.ஐ.டி. போலீசார் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், எனவே அவர்களின் பாதுகாப்பில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!