வங்கக் கடலில் 23-ம் தேதி ஏற்பட போகும் மாற்றம்..!! அபாய எச்சரிக்கை..!!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு வருமாறு:-

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 23ம் தேதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்யும். மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!