ஆந்திராவின் முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி உயிரிழந்தார்..!!


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி.திவாரி என அழைக்கப்படும் நாராயண் தத் திவாரி தனது 92-வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று மரணம் அடைந்தார். இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்வை துவங்கிய இவர், பிரஜா சோசியலிஸ்ட் கட்சியை துவங்கி பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான என்.டி.திவாரி, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 2 மாநிலங்களுக்கு முதல்வராக இருந்த ஒரே நபர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.

1925-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி பிறந்த இவர், தனது பிறந்த நாளன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!