ஒரே வாரத்தில் சருமப் பிரச்சனை, முடி உதிர்தலை தடுக்கும் வேப்பிலை… இப்படி செய்யுங்க..!


எல்லா பெண்களது விருப்பமும் அழகிய முடியையும், பொலிவான சருமத்தைப் பேணுவதுமே. ஆனால் இன்றைய வாழ்க்கை முறை முடி உதிர்வு, இளநரை, பொலிவற்ற சருமம் போன்றவற்றையே பரிசாகக் கொடுக்கின்றது. இதற்கு காரணம் ஊட்டச்சத்தற்ற உணவுகள், சூழல் மாசு போன்றவையே.

தீர்வற்ற பிரச்சினைகள் என்று வாழ்க்கையில் எதுவும் இல்லை. உங்களது சருமம், முடி பிரச்சினைகளையும் இலகுவாக வேப்பிலையால் தீர்த்துவிட முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?

வேப்பிலையால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

வேப்பிலையால் பக்டீரியாத் தொற்றுக்களை இலகுவாக குணப்படுத்தும் மருத்துவ பண்பு உள்ளதனால் பல நூற்றாண்டுகளாக இதனைப் பயன்படுத்துகின்றனர். இது சருமம் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், விட்டமினையும் வழங்கி, பிரச்சினைகளைத் தீர்த்து விடுகிறது. இதில் உள்ள அண்டிஒக்ஸிடன், அமினோஅமிலங்கள் முடி உதிர்வைத் தடுப்பதுடன், சரும அழகையும் மெருகேற்றுகிறது.

சருமத்திற்கான பயன்பாடு.

1.பளபளப்பான சருமம்.
வேப்பிலையை பிளண்டரில் போட்டு பசையாக அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து சருமத்திற்கு பூசுவதனால் சுத்தமான, பளபளப்பான சருமத்தைப் பெற முடியும்.

2.சரும சுருக்கத்திற்கு.
வேப்பிலைப் பவுடருடன், முல்தானிமெட்டி, மற்றும் சிலதுளி றோஸ் வாட்டர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளிற்குப் பூசவும் அவை உலர்ந்த பின் நீரினால் கழுவவும். வேப்பிலை சருமத்தை மிருதுவாக்குவதுடன், முல்தானிமெட்டி தேவையற்ற எண்ணெய்களை நீக்கி விடும்.


முடியின் பாதுகாப்பிற்கு,

1.முடி வளர்ச்சிக்கு.
வேப்பிலையை அரைத்து தயிருடன் சேர்த்து முடி மற்றும் முடியின் வேர்ப்பகுதிகளிற்கு தடவி வாரத்திற்கு இரு தடவைகள் குளிப்பதனால் முடி வளர்ச்சி அதிகமாகும். முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் வேப்பிலையில் இருந்து கிடைக்கின்றது.

2.முடி உதிர்வைத் தடுக்கும்.
முடி உதிர்வைக் குறைப்பதற்கு வேப்பிலையுடன் பால் சேர்த்து தலையில் நன்றாக தடவி 1 மணி நேரத்தின் பின் குளிக்கவும். இதனை தொடர்ச்சியாக செய்வதனால் முடி உதிர்வடைவது குறையும்.

3.இள நரையைத் தடுப்பதற்கு.
இளநரைக்குக் காரணம் பரம்பரை மட்டுமன்றி, இரசாயணப் பொருட்களின் பயன்பாடுமே. இதனை தீர்ப்பதற்கு வேப்பிலையை எண்ணெய்யில் போட்டு சூடாக்கவும். பச்சை நிறமாக மாறிய எண்ணெய்யை முடியில் தடவி 30 நிமிடங்களி பின் குளிக்கவும்.

4.இரசாயணப் பொருட்களினை பயன்படுத்திய பின்பு.
இரசாயணப் பொருட்களை முடிக்கு பயன்படுத்திய பின்பு முடியை பாதிப்படையாமல் பாதுகாப்பதற்கு தேங்காய் எண்ணெய்யில் வேப்பிலை சேர்த்து சூடாக்கி, அந்த எண்ணெய்யை முடியில் தடவி 30 நிமிடங்களின் பின் குளிக்கவும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!