பிரபல தெலுங்கு நடிகரை காதலிக்கும் ரெஜினா…? டோலிவுட்டில் பகீர் தகவல்…!!


பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவருடன் காதலில் விழுந்து விட்டார் நடிகை ரெஜினா கஸான்ட்ரா என்று டோலிவுட்டில் பலமாக பேச்சு அடிபட்டு வருகிறது.

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜ தந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தமிழ் நடிகையான இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் டோலிவுட் நடிகர் ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. இதை ரெஜினா மறுத்து வந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘சங்கரா’ என்னுடன் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்த நர ரோஹித்துடன் என்பவரை ரெஜினா காதலித்து வருவதாக தற்போது தகவல் பரவி பரவி வருகிறது. இதுகுறித்து ரெஜினா மெளனம் சாதித்து வருகிறாராம்.


ஆனால் இது தொடர்பாக நர ரோஹித் வாய்திறந்துள்ளார். அவர் கூறியதாவது:

ரெஜினாவும் நானும் காதலிப்பதாக வரும் தகவல்பற்றி கேள்விப்பட்டேன். அடிக்கடி இருவரும் இணைந்து நடிப்பதால் இதுபோன்ற வதந்தி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நாங்கள் தொழில் ரீதியான நட்புடன்தான் இருக்கிறோம். அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. வீணாக கதையைக் கிளப்பி விடாதீர்கள் என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!