பாடகி சின்மயி பின்னணியில் அரசியல் கட்சியா..? வைரமுத்துக்கு வக்காலத்து வாங்கிய சீமான்..!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘மீ டூ’ அமைப்பால் நியாயவாதிகள், குற்றமற்றவர்கள் கூனிக் குறுகுவதற்கும், சிக்கிக்கொள்வதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் பழிவாங்க வேண்டும் என்ற வன்மத்துக்காக எதையாவது எழுதி விட முடியும்.

கவிஞர் வைரமுத்து மீது குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயி, இவ்விவகாரத்தில் சட்டப்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு இல்லை என்று வக்கீல்கள் கூறுவதாக தெரிவித்து இருக்கிறார்.


அப்புறம் இப்படி பதிவிடுவதால் என்ன லாபம் உங்களுக்கு வந்துவிடும். என்ன நிறைவடைய முடியும். அவரை அசிங்கப்படுத்தலாம். அதை தவிர ஒன்றும் நடக்காது.

14 ஆண்டுகள் நீங்கள் ஏன் இதை வெளியிடாமல் இருந்தீர்கள்? என்று கேட்டால், அவர்(கவிஞர் வைரமுத்து) அரசியல் செல்வாக்குடன் இருந்தார் என்று சின்மயி கூறுகிறார்.

இப்போது நீங்கள் பயம் இல்லாமல் சொல்கிறீர்களே, உங்கள் பின்னால் அரசியல் செல்வாக்கு வந்துவிட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

முன்பை விட வைரமுத்துவுக்கு இப்போது தான் அரசியல் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. வைரமுத்து என்பவர் ஒரு பாடலாசிரியர் என்று பார்க்க முடியாது. திரைப்படத்தில் பாட்டு எழுதுபவர், புத்தகம் எழுதுபவர் என்று நினைக்க முடியாது. ஒரு இனத்தின் பிரதிநிதி, பெருமை. எனவே எந்த பெருமையும் இருக்கக்கூடாது. அதனை சிதைத்துவிட வேண்டும் என்று சொன்னால், எப்படி அனுமதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!