ஆண்டாளை அசிங்கப்படுத்தினவர் அனுபவிக்கிறார் – வைரமுத்துவை விளாசிய ஹெச்.ராஜா…!


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கிய நிலையில் அந்த தீர்ப்பு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெண்கள், சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்கப்படுவது குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்ய பிரமாணம் ஏற்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது, நூறு ஆண்டுகளாக இருந்து வரும் பழக்கம் மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25-ன்படி மத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். அது இந்து மதத்திற்கும் பொருந்தும் என்றார்.

ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவத்தில், ஆண்டாள் முகத்திரையைக் கிழித்துக் கொண்டிருக்கிறாள் என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து பேசிய பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, இந்து மதத்தில் உள்ளதுபோல் சமநிலை வேறு எந்த மதத்திலும் இல்லை. பெண்களைக் கடவுளாக பார்க்கும் மதம் இந்து மதம்.

இனி குடும்பத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இந்து என்று பெயர் சூட்டுங்கள். ஆண்டாள் சாபம் ஆயுள் முழுவதும் தாபம். ஆண்டாளை விமர்சித்தவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று வைரமுத்துவை ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார்.-Source:asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!