குண்டானவர்கள் கழுதை மேல் சவாரி செய்ய தடை – எந்த நாட்டில் தெரியுமா…?


கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸிலிருரிந்து சுமார் 128 மைல் தொலைவில் உள்ளது சாண்டோரினி தீவுகள். இந்த தீவுகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சாண்டோரினி தீவுகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் கழுதைகள் மூலம் சவாரி செய்கின்றனர்.

இந்தநிலையில், சாண்டோரினி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கழுதைகள் வாரம் முழுவதும் சுமந்து செல்கின்றது. நீண்ட நேரம் அவர்களை சுமந்து செல்வதால். அதன் முதுகுப்பகுதி, உடலில் காயம் ஏற்படுகிறது. அதற்கு தகுந்த உணவும், தண்ணீரும் சரிவர கொடுக்கப்படவில்லை.

மேலும் குண்டானவர்கள் கழுதை மேல் பயணம் செய்வதால் அதன் முதுகுப்பகுதி காயம் அடைந்துள்ளது. உடலில் சில பகுதிகளும் காயம் அடைந்துள்ளது. அதன் உரிமையாளர்கள் கழுதைகளை வைத்து துஷ்பிரயோகம் செய்கின்றனர் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து பரீசிலனை செய்த அந்நாட்டு அரசு கழுதைகளின் நலனுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கழுதைகளின் மேல் சுமந்து செல்லும் அளவு 100 கிலோவுக்கு மேல் இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டான சுற்றூலா பயணிகள் கழுதை மேல் சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!