வீட்டிலே இயற்கையாக உங்க பாதத்தினை பராமரிப்பது எப்படி..?


மென்மையான மிருதுவான பாதங்களை வைத்திருப்பதில் யாருக்குத் தான் ஆசை இல்லை? ஆனால் உண்மையை சொன்னால் முகத்திற்கும் முடிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பலரும் கால்களிற்குக் கொடுப்பதில்லை.

சிலர் சந்தையில் உள்ள விலை அதிகமான கிறீம்களைப் பயன்படுத்தி போதிய தீர்வும் கிடைக்காமல் பணத்தை விரயம் செய்து கொள்கின்றனர். அல்லது பார்லருக்கு சென்று பாதத்திற்கு தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும் அவை முழுமையான நிரந்தர தீர்வைத் தரப் போவது கிடையாது. தொடர்ச்சியாக பாத பராமரிப்பில் அக்கறை செலுத்துவதன் மூலமாகவே சிறந்த அழகிய பாதத்தைப் பேண முடியும்.

உங்களுக்காக பாதத்தை பராமரிக்கும் சில முறைகள்.

1. ஈரப்பதத்தை பேணுதல்.
பாதத்தை எந்நேரமும் ஈரலிப்பாக பேணுவது மிகவும் அவசியமானது. அதற்காக கிறீம்களைப் பயன்படுத்துவதனால் உலர்வடைந்து பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.

2. பாதத்திற்கு ஏற்றவாறு பாதணிகளை அணிதல்.
பாதத்தின் அளவிற்கும் தன்மைக்கும் ஏற்றவாறு பாதணிகளை சரியாக வாங்குதல் முக்கியமானது. இதனால் பாதம் பாதுகாக்கப்படுகிறது.

3. சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாத்தல்.
சூரிய ஒளியில் உள்ள UV கதிர்கலின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு சன் கிறீம்களைப் பயன்படுத்துவதுடன், ஒவ்வொரு நாளும் இரவில் சூடான நீரில் கால்களை ஊற வைத்து கழுவுதல் சிறாந்தது.


4. நகப்பூச்சுக்கள் பயன்படுத்தல்.
பழைய நகப்பூச்சுகளை ரிமூவர் பயன்படுத்தி நீக்குவதன் மூலம் நகங்களும் சுத்தமாவதுடன் நகப்பூச்சுக்கள் பயன்படுத்துவதனால் நகங்கல் வலிமையாகக் காணப்படும்.

5. ஸ்கிரப்.
ஸ்கிறப் பயன்படுத்துவதனால் பாதங்களில் உள்ள இறந்த கலங்கள் நீங்கி பாதம் மென்மையாகவும் மிருதாவகவும் காணப்படும். ஸ்கிறப் பயன்படுத்தி தேய்க்கும் போது மிகவும் அழுத்தமாக தேய்ப்பதை தவிர்க்கவும்.

உப்பு, சீனி, பேபி எண்ணெய் பயன்படுத்தி இந்த ஸ்கிறப்பை தயாரிக்கலாம்.

6. நகங்களை வெட்டுதல்.
நகங்களை எப்போதும் வெட்டுவதனால் பாதங்களை சுத்தமாகப் பேணுவதுடன் நடக்கும் போதும் இலகுவாக இருக்கும்.

7. தினமும் மசாஜ் செய்தல்.
சூடான ஒலிவ் அல்லது பாதாம் எண்ணெய் பயன்படுத்தி தினமும் 5 நிமிடங்களாவது பாதங்களை மசாஜ் செய்வதனால் பாதம் மென்மையாகப் பேணப்படும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!