இளைஞரை கோடாரியால் துடிதுடிக்க வெட்டி கொன்று 12 வயது சிறுமி செய்த வெறிச்செயல்..!


ரஷ்யாவை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவருடைய பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சிறுமியின் வீடு அமைந்திருக்கும் சோச்சி பகுதியில் இருந்து 1500 மைல் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி, 22 வயதுள்ள இளைஞருடன் வசித்து வருவதாக தெரியவந்தது.

மேலும் அந்த சிறுமி தன்னுடைய முகநூல் பக்கத்தில், “நான் ஒரு வேட்டைக்காரனை விரும்புகிறேன். நான் யாருக்காகவும் அவரை விட்டு கொடுக்க மாட்டேன். அவரை தவிர வேறு யாரும் எனக்கு தேவையில்லை” என பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் வுட்டன் கிராமபுற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து புகை வருவதாக ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்ட பொழுது, மனித மூளை சமைக்கப்பட்ட நிலையிலும், உடலின் பல்வேறு பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளார்.


பின்னர் இதில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமி கோடரியை கொண்டு அலெக்சாண்டர் போபோவிச் என்ற 21 வயது இளைஞரை கொலை செய்ததாகவும், அவருக்கு உடந்தையாக 22 வயதான வேட்டைக்காரன் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த சிறுமியை வேட்டைக்காரன் துஷ்பிரயோகம் செய்திருப்பதும் தெரியவந்து. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இதில் குற்றவாளியின் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இதில் ஈடுபட்ட சிறுமி, தற்போது பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!