என்னுடைய காதலனை கொன்று விடாதீர்கள்…. தற்கொலை செய்து கொண்ட இளம் யுவதியால் பரபரப்பு..!!


திருகோணமலையில் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பகுதியில் காதலித்து வந்த காதலனுடன் தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை, சிறிமாபுற பகுதியைச் சேர்ந்த அமாளிகா விராஐனி சொய்சா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.குறித்த யுவதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது அக்காவிடம் அம்மாவை சிறந்த முறையில் பார்த்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அத்துடன் தான் காதலித்து வந்த காதலனுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் கடிதத்தின் மூலம் கூறியுள்ளார்.இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.source-.tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!