இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு! மத்திய அமைச்சர் அறிவிப்பு…!


பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தொடர்ந்துநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்த்துள்ளது என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் உயர்வால் இந்தியாவில்பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. மேலும் சமீப சில நாட்களில் ரூபாயின் மதிப்பு சரிவடைந்துவருகிறது.

இது தொடர்பாக இன்றுமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர்செய்தியாளர்களுக்கு பேட்டியளிதத்தஅவர், “பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய்மீதான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் 4% க்கும் கீழே பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அரசு அதிகரித்துள்ளது. பெட்ரோலியத்துறை அமைச்சகத்துடன், நிதி அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.பல பொருட்களின் இறக்குமதி வரி சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படுகிறது. இதில், பெட்ரோல், டீசலுக்கானகலால் வரி ரூ.1.50 மற்றும் எண்ணெய் நிறுவனம் ரூ.1 என மொத்தம் ரூ.2.50குறைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!