கயல்விழிக்கு நடந்த வளைகாப்பு – சென்ராயன் அண்ணாச்சி செம்ம ஹாப்பி – வைரல் புகைப்படம்..!


காமெடி நடிகர் சென்ராயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது பிக்பாஸ் சென்ராயனாக மட்டும் தான் பலரால் பார்க்கப்பட்டு வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதார்த்தமான மனிதர் என ரசிகர்கள் மத்தியில், நல்ல பெயரை பெற்ற இவர்… இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் இருந்தது.

மேலும் இவர் உள்ளே இருந்த போது தான், இவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயமே இவருக்கு தெரிய வந்தது. இந்த சந்தோஷமான தருணத்தை துள்ளி குதித்து கொண்டாடினார் சென்ராயன். அதே போல் ரசிகர்கள் பலரும் சென்ராயன் மற்றும் அவருடைய மனைவிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, தற்போது மனைவியுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சென்ராயன் வீட்டில்… தற்போது விசேஷம் நடந்துள்ளது. அதாவது சென்ராயன் மனைவி கயல்விழிக்கு அவருடைய வீட்டில் மிகவும் சிம்பிள்ளாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர் கயல்விழி பெற்றோர்.

மேலும் வளையக்காப்பு முடிந்ததும், கயல்விழியை அவர்களை பெற்றோர் அழைத்து செல்ல வேண்டாம்… நானே நல்ல பாத்துக்குறேன் என கூறியுள்ளாராம். எனினும் தன்னுடைய நான்கு வருட கனவு தற்போது நிஜமாகி உள்ளதால் சென்ராயன் அண்ணாச்சி செம்ம ஹாப்பி.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!