கல்யாணத்துக்கு முன் அது வச்சிக்கிறது தப்பு இல்லைன்னு அப்பவே சொன்னேன் – குஷ்பு அதிரடி..!


திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று நடிகை குஷ்பு, கடந்த சில வருடங்களுக்குமுன்பு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம், அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், திருமணமான ஆண் – பெண் இடையே கள்ள உறவு கிரிமினல் குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக நடிகை குஷ்பு கூறும்போது, இந்த விஷயம் குறித்து 15 வருடங்களுக்கு முன்பு பேசினேன். அதற்கு இப்போது, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னோட பேச்சுதான்.

ஒரு விஷயம் இருக்கு, அதை எவ்வளவு நாட்கள்தான் பேசாமலேயே இருக்கப்போறோம். பிரச்சனையைப் பற்றி பேசினால்தான் தீர்வு கிடைக்கும். ஒரு 15 வருடத்துக்குப் முன்பு நான் பேச ஆரம்பித்தேன், அதற்கான தீர்ப்பு இப்ப கிடைத்துள்ளது.

எல்லா சமுதாயத்திலும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது யார்? ஆண்கள்தான்.எப்படியாவது, பெண்களை காலடியில் வைக்க வேண்டும் என்று நினைப்பதுதான்! உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தாண்டி, பெண்களுக்கு வாழ சம உரிமை உள்ளது.

என்கிற ஒரு தீர்ப்பாக இது உள்ளது. கணவன் இருக்கும்போது மனைவி வேறொரு ஆணுடன் இருக்கிறார்… அப்படிப்பட்ட அந்த பெண்ணுக்கு நூறு பேரு வைப்பார்கள். அதுவே ஒரு ஆண் அப்படி இருக்கும்போது இது எல்லாம் சகஜம், பெரிசாக இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தீர்ப்பு இருக்கு.

இந்த தீர்ப்பில் சில விஷயங்களை நாம் யோசித்தாக வேண்டும். கணவன் மனைவிக்கு இடையேயான உறவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருவருக்கும் உள்ளது. உடல் ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் இருக்க வேண்டும்.

மனைவி இருக்கும்போது, இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டல் அது மனைவிக்கு செய்யும் துரோகம். கணவன்
இருக்கும்போது, மனைவி இன்னொருவருடன் உறவு வைத்துக் கொண்டால், அது கணவருக்கு செய்யும் துரோகம்.அதனைக் காப்பாற்ற வேண்டியது இருவரிடம் மட்டுமே உள்ளது.

பல ஆண்டுகளாக, பெண்கள் இப்படித்தான் இருக்கணும்… இப்படித்தான் வாழணும்… பெண்களுக்கு இதுதான் சட்டம் இருக்கு என்று நாம் நினைத்து வாழ்ந்து வந்தோம். ஆனால், பெண்களுக்கு சக உரிமை இருப்பதாக அனைவரும் கூறிக் கெண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும் அதனை ஏற்க மறுத்து வந்தார்கள். பெண்கள் மட்டும் ஏன் தாலி கட்டிக் கொள்ள வேண்டும், அடிமையாக இருப்பதற்காகத்தான் கழுத்தில் தாலி அணிந்து கொள்ள வேண்டுமா? ஆண்கள் கழுத்தில் தாலிக் கட்ட கூடாதா? என்று கேள்வி கேட்டவர் பெரியார்.

இதனால் அவருக்கு நிறைய எதிர்ப்பு எழுந்தது. சமூகத்துக்கு எதிராக பேசியதாக பெரியார் மீது குற்றம் சுமத்தினோம். ஆனால், இப்போது சட்டமே வந்துள்ளது. தவறு நடக்கும்போது, பெண் மீதுதான் அனைத்து தவறுகளும் இருப்பதாக நினைக்கிறார்கள், ஏன், பல பெண்களே அப்படித்தான் பார்க்கிறார்கள். தவறான நோக்கத்தோடு பெண்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாற்றம் வந்தாலே போதும் என்று நடிகை குஷ்பு கூறினார்.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!