ஐஸ்கிரீம் விற்பனையாளரின் கணக்கில் இத்தனை கோடி பணமா..?


பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு துறை (FIA) கராச்சியில் உள்ள ஐஸ் கிரீம் விற்பனையாளர் அப்துல் காதிர் என்பவரின் கணக்கில் 2 பில்லியனுக்கும் அதிகமான ( ரூ. 434 கோடி) பணம் பரிமாற்றம் செய்து உள்ளதை கண்டறிந்து உள்ளது.

இந்த தொகை அப்துல் காதிர் கணக்கில் அடையாளம் தெரியாத கணக்கிலிருந்து மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுபோல் கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் பில்லியன் கணக்கான ரூபாய்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ள 500 க்கும் அதிகமான கணக்குகள் உள்ளன.அப்துல் காதிர் போன்ற ஏராளமான மக்கள் தங்கள் பெயர்களில் மிகப்பெரிய அளவில் பணம் இருப்பது கூட தெரியாதவர்கள் என அவர் கூறினார்.

முன்னதாக, ஒரு தனிப்பட்ட வழக்கில், FIA ஒரு கராச்சி மனிதனின் வங்கிக் கணக்கில் 8 பில்லியன்பணம் இருப்பதை கண்டு பிடித்தது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!