போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர்..!! இழப்பீடு வழங்க ஊழியரின் குடும்பம் கோரிக்கை..!!


உத்தரபிரதேச மாநிலத்தில் ஆப்பிள் நிறுவன ஊழியரான விவேக் திவாரி கடந்த வெள்ளிக்கிழமையன்று காரில் கோம்டி நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விவேக் திவாரியின் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் காரை நிறுத்தாத திவாரி, அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பைக்கை ஏற்ற முயற்சித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத போலீஸார் துப்பாக்கியால் விவேக் திவாரியை சுட்டனர். இதில் குண்டு அடிப்பட்ட விவேக் திவாரி மேற்கொண்டு காரை ஓட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதனிடையே படுகாயமடைந்த திவாரி லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த விவேக் திவாரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே, அவர் துப்பாக்கி குண்டு அடிப்பட்டதில் உயிரிழந்தாரா? அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? என்பது தெரிய வரும் எனக் கூறினார். இதனிடையே உயிரிழந்த விவேக் திவாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்திருந்தது.

மேலும் உத்தரபிரதேச அமைச்சர்கள் ப்ரஜேஷ் தாகூர் மற்றும் அஷுடோஷ் தாண்டன் ஆகியோர் உயிரிழந்த விவேக் திவாரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் உயிரிழந்த விவேக் திவாரியின் மனைவி கல்பனா திவாரி கூறுகையில்,

என் கணவரை சுடுவதற்கு போலீசாருக்கு உரிமையில்லை. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யனாத் என்னை சந்தித்க வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு நீதி வழங்க அவர் உறுதி கோர வேண்டும். அரசாங்கம் கூறியிருக்கும் 25 லட்சம் இழப்பீடு என்பது எங்களுக்கு போதுமானது அல்ல. எங்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் என் கணவர் மட்டுமே. என் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலையாக உள்ளது. எனவே, அரசாங்கம் ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும். தொடர்ந்து என் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்து வந்தால் நான் என் கணவரின் உடல்தகனத்தை மேற்கொள்ள மாட்டேன் எனக் கூறினார்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!