பிரதமர் மோடியின் ஆன்மீக குருவான கதக் ஆட்டக்காரர் கைது..!!


பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அலுவலக உதவியாளர் ஒருவர் கடந்த மாதம் புல்கித் மிஸ்ரா என்று அழைக்கப்படும் புல்கித் மகராஜ் கதக் ஆட்டக்காரர் மீது போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கலை மற்றும் கலாச்சார அமைச்சக செயலாளருக்கு போலி ஆசாமி புல்கித் மிஸ்ரா கடிதம் எழுதினார். அதில் பிரதமரின் ஆன்மீக குரு என்பதால் உத்தரபிரதேசத்தில் தமக்கு பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் பிரதமர் மோடியுடன் இருப்பதை போன்று புகைப்படம் உருவாக்கி அனுப்பி இருந்தார். இது உயர் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ரோஹினி க்ரைம் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் போலி ஆசாமி என தெரியவந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், தான் மோடியின் ஆன்மீக குரு என்றும். அவர் மத்திய மந்திரிகள், ஜனாதிபதி உடனும் இருக்கும் படங்களை அதிகாரிகளிடம் காண்பித்து அவர்களை நம்ப வைத்துள்ளார்.

அவர் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, தனக்கு விஐபி அந்தஸ்து உள்ளிட்ட அரசு சலுகைகள் வேண்டும் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு ஃபேக்ஸ் அனுப்பியது தெரியவந்துள்ளது.

தற்போது க்ரைம் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு மகராஜால் சரியான பதில்களை அளிக்க முடியவில்லை. விஐபி சலுகைகள் கோரிய அவரிடம் போதுமான ஆதாரங்களும் இல்லை. அதனால் அவரைக் கைது செய்துள்ளோம் போலீசார் தரப்பில் என தெரிவித்தனர். source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!