உடையாத நீளமான நகம் வேண்டுமா? வீட்டிலே இத முதல்ல ட்ரை பண்ணுங்க..!


நகத்தின் நிறம் மங்கிக் காணப்பட்டால் அது கையின் முழு அழகையும் கெடுத்து விடும். நகம் மங்கிப் போவதற்குக் காரணம் பல்வேறு வேலைகளைச் செய்யும் போது அழுக்குகள் படிவதே.
மஞ்சள் நிற நகம் காணப்பட்டால் மற்றவர்கள் முன்னிலையில் கைகளை வெளிக்காட்டுவதில் தயக்கம் ஏற்படயத்தான் செய்யும். இதற்கு தூரிகைகளை மட்டும் பயன்படுத்தி சுத்தப்படுத்துவது மிகவும் அவசியமானது. அதற்காக பல முற்சிகளை எடுக்க வேண்டும்.

ஆனால் இயற்கையான சில முறைகளினால் நகத்தின் நிறத்தினை மீளப்பெறுவதுடன் பளபளப்பையும் பெற முடியும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என்பதே சிறப்பானது.

நகத்தைப் பாதுகாக்கும் இயற்கை முறைகள் என்ன?

1. எலுமிச்சைச் சாறு.
விட்டமின் சி க்கு பளபளப்பைத் த்ரெஉம் தன்மை இருப்பதனால், இரண்டு எலுமிச்சைப் பழத்தை பிளிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு கை நகங்களையும் 10 நிமிடங்களாவது ஊற வைக்க வேண்டும். பின்பு நீரினால் கழுவினால் பளபளப்பான நகத்தினைப் பெற முடியும்.

2. சமையல் சோடா.
இரண்டு தேக்கரண்டி சமையல் சோடாவை சூடான நீரில் கலந்து நகங்கலிற்கு பூசி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். சமையல் சோடாவுக்கு சுத்தப்படுத்தும் தன்மை இருப்பதனால் நீரினால் கழுவியதும் நகத்தின் நிறத்தில் மாற்றத்தை பார்க்க முடியும்.

3. பற்பசை.
பற்பசைகளை நகத்தில் தடவி, 3 நிமிடங்கள் ஊறிய பின்பு நீரினால் கழுவுவதும் நகத்தின் நிறத்தை மீளப்பெற்வதற்கான சிறந்த முறையே..


4. வெள்ளை விநாகிரி.
ஒரு பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி வெள்ளை விநாகிரியை எடுத்து அதை நீருடன கலந்து அதில் நகத்தை ஊற வைக்கவும், 3 நிமிடங்களில் கைகளை கழுவி மொய்ஸ்டரைசர் கிறீம் பயன்படுத்துவது சிறந்தது.

5. சோப்பும் நீரும்.
சோப்பை தூரிகையைப் படயன்படுத்தி நகங்களில் நன்றாக தேய்த்து நீரில் கழுவதும் சிறந்த முறையே.

6. தேயிலை மர எண்ணெய்.
இந்த எண்ணெய்யை பஞ்சினால் நகங்களில் தடவி சில நிமிடங்கள் ஊறிய பின்பு நீரினால் கழுவவும். இதனை சில நாட்களிற்கு தொடர்ச்சியாக செய்வதனால் சிறந்த பலனைப் பெற முடியும்.

7. எலுமிச்சைப்பழமும் சமையல் சோடாவும்.
ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றுடன் 2 அல்லது 3 தேக்கரண்டி சமையல் சோடாவும் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அந்த பசையை நகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறிய பின்பு சோப் மற்றும் நீரினால் கழுவினால் சிறந்த பலனைபெற முடியும்.

8. எலுமிச்சைப் பழமும் உப்பும்
எலிமிச்சைப்பழச் சாறும் உப்பும் சம அளவு எடுத்து ஸ்கிறப் த்யாரித்துக் கொள்ளவும். அதை நகங்களிற்குப் பயன்படுத்தி 15 நிமிடங்கள் ஊறிய பின்பு சுத்தப்படுத்துவதனால் பளபளப்பைப் பெற முடியும். இறுதியாக மொய்ஸ்டரைசர் கிறீம் பயன்படுத்துவது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!