தாடிக்காரரின் கட்டுப்பாட்டில் நடிகை சில்க் – சீரழித்து நடு தெருவில் விட்ட அரசியல்வாதிகள்..!


நடிகை சில்க் ஸ்மிதா இடம் பெறும் பாடல்களே இல்லாத படங்கள் இல்லை என்று கூறலாம். என்பதுகளில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர்.

1995 ஆம் ஆண்டு ராக தாளங்கள் என்ற படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் வெளியாகாமல் நின்று போனது. அந்த படத்தை வெளியிட இயக்குநர் திருப்பதி ராஜன் முயன்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

அப்படத்தின் இயக்குநர் திருப்பதி ராஜன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய சில்க் சுமிதா கடந்த 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்தில் இன்னும் மர்மம் விலகாத நிலையில் பிரபல இயக்குனர் திருப்பதிராஜன் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை என கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் அரசு வேலையில் இருந்தேன். அப்போதுதான் வீணையும் நாதமும் என்ற படத்துக்காக ஹீரோயினை தேடிக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பெண் இந்த படத்துக்கு பொருத்தமாக இருப்பார் என கூறி என்னை என் நண்பர் அந்த இடத்துக்கு அழைத்து சென்றார். அப்போது விஜயலட்சுமி என்ற அந்த பெண்ணுக்கு சுமிதா என்ற பெயரை வைத்தேன்.


கோவூரில் நாங்கள் வீணையும் நாதமும் படத்துக்காக கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வந்தோம். அப்போது வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட 3 பேர் என்னிடம் வந்து சுமிதாவை நடிக்க கேட்டார்கள். அதன்பிறகுதான் வண்டி சக்கரம் என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். அந்த படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடித்ததால் அவர் சில்க் சுமிதா என அழைக்கப்பட்டார். அவர் புகழின் உச்சிக்கு சென்றவுடன் என்னை மறந்து விட்டார். எனது படத்தில் நடித்துக் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அந்த கோபத்தில் நான் இருந்தேன்.

திடீரென அவர் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் என்னை பார்க்க விரும்புவதாக கூறினார்கள். அப்போது அவர் நன்றி கெட்டவர் நான் அவரை பார்க்க விரும்பவில்லை என்றேன்.

பின்னர் அவரை படப்பிடிப்பில் நான் சென்று பார்த்தபோது என்னை ஏன் அழைத்தாய் என கேட்டேன். அப்போது அவர் கண் கலங்கினார். உடனே அவர் ஏதோ கஷ்டத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். தாடிக்காரர் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் சில்க் சுமிதா இருந்தார். அந்த தாடிக்காரர் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தது உண்மைதான்.


சில அரசியல்வாதிகளின் பிடியிலும் சில்க் இருந்தார். அவரது கடைசி காலத்தில் கையில் காசு கூட இல்லாமல் அவரை தெருவில் விட்டு விட்டனர். கடைசியாக சில்க் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு என்னென்ன கொடுமைகளை எத்தனை பேர் செய்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

சில்க் சுமிதாவை பொருத்தவரையில் அது தற்கொலை அல்ல. இவரது கடைசி காலமும் ஏகப்பட்ட துன்பங்கள் நிறைந்தது. இது அல்லாமல் இன்னும் ஏராளமான விஷயம் இருக்கிறது. அதை நான் புத்தகமாக எழுதி வருகிறேன்.

சில்க் சுமிதா சாக போகிறார் என்பது அவருக்கு 10 நாட்களுக்கு முன்பே தெரியும். அவரை வைத்து நன்கு பணம் சம்பாதித்துவிட்டு அவரை நடுத்தெருவில் விட்டனர் என கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!