அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தீலீபனை பற்றி முதலமைச்சர் கூறியது..?


அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த திலீபனின் வாழ்க்கை இன்றைய ஜனநாயக, அகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருக்கின்றது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் சுற்றுலாக் கண்காட்சிகள், கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவுத் திருவிழா ஆகிய நிகழ்வுகளை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “தியாகி திலீபன் 31 வருடங்களுக்கு முன் இந் நாளில் உயிர் நீத்த காலை நேரம் 10.48 ஐ நினைவு கூர்ந்து இக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது.

ஜனநாயக முறையில் அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த ஒருவரின் வாழ்க்கை இன்றைய ஜனநாயக, அகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருந்தது. ஆகவே தான் அவர் நினைவுக்கு மதிப்பளித்து இக் கூட்டத்தைச் சற்று தாமதித்துத் தொடங்குகின்றோம்.

வட பகுதியின் சுற்றுலா அபிவிருத்தி வளர்ச்சியடையாமைக்கு இப் பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் ஒரு காரணமாக காட்டப்பட்டுள்ளது.

ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் சுற்றுலாத்துறையின் வளரச்சியானது மிகவும் மந்தமான கதியில் நகர்வது வருத்தத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு மிகக் கூடிய அளவிலான சுற்றுலா மையங்களும் புராதன சின்னங்களும் வரலாற்றுப் பதிவுகளும் மற்றும் இன்னோரன்ன பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களும் காணப்படுகின்றன.

அவற்றை முறையாக வரிசைப்படுத்தி எமது புராதன சின்னங்களின் வரலாற்றுப் பதிவுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திருந்தார்.source-jvpnews

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.