பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு… ராஜஸ்தான் கோட்டையில் நபர் செய்த விபரீதம்..!!


தீபிகா படுகோனே நடிப்பில் பாலிவுட் இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி என்ற ஹிந்தி படத்தை இயக்கி உள்ளார். ராஜஸ்தானை ஆட்சி செய்த, ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்த படம் தயாராகிறது.

அவரது கணவர், ரதன் சிங்காக, ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக, ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.

படத்தின் இயக்குனர், நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு, மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளன. இதனால், அடுத்த மாதம் வெளியாக இருந்த இந்த படம், 2018க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகர்ஹர்கா கோட்டையில் அடையாள தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தின் அருகே பத்மாவதி படத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் பத்மாவதி படத்தை எதிர்க்கிறோம், நாங்கள் உருவ பொம்மையெல்லாம் எரிக்க மாட்டோம், கொலை செய்துவிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, பத்மாவதி படம் ரிலீஸாவதில் கடும் சிக்கல் உருவாகி இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!